மக்களே உஷார்..! தர்பூசணியை இப்படி டெஸ்ட் பண்ணி பாருங்க…. 1,200 கிலோ பழங்கள் பறிமுதல்

x

மதுரை மாநகர் பி.பீ.குளம் உழவர்சந்தை அருகே ஆயிரத்து 200 கிலோ சாயம் ஏற்றப்பட்ட தர்பூசணி பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தர்பூசணி பழ விற்பனை கடைகளில் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்ததை அடுத்து, வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள தர்பூசணி கடைகளில் ஆய்வு நடத்த இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்