சென்னை முழுவதும்... வெளியான முக்கிய தகவல்

x

சென்னை மாவட்டத்தில் மொத்தம் 40 லட்சத்து 15 ஆயிரத்து 878 வாக்காளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் வெளியிட்டார்.

அதன்படி, சென்னை மாவட்டத்தில் 19 லட்சத்து 70 ஆயிரத்து 279 ஆண் வாக்காளர்களும், 20 லட்சத்து 44 ஆயிரத்து 323 பெண் வாக்காளர்களும், ஆயிரத்து 276 இதர வாக்காளர்கள் என மொத்தம் 40 லட்சத்து 15 ஆயிரத்து 878 வாக்காளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டை விட 44 ஆயிரத்து 974 ஆண் வாக்காளர்கள், 51 ஆயிரத்து168 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 96 ஆயிரத்து184 புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில், குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 980 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.

அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் 3 லட்சத்து16 ஆயிரத்து 642 வாக்காளர்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்