வங்கியில் இருந்து எடுத்து வந்த ரூ.7.50 லட்சம்... வீட்டின் முன்பே பறிபோனதால் அதிர்ச்சி | Viruthunagar
ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்டிட தொழிலாளியை தாக்கி ஏழரை லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தைலாகுளம் வடக்கு தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி பெரியசாமி, சொந்தமாக இடம் வாங்குவதற்காக கனரா வங்கி கிளையில் உள்ள சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். தனது வீட்டின் முன் அவர் பைக்கை நிறுத்திய போது, இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் பெரியசாமியை தாக்கி விட்டு அவர் வைத்திருந்த பணத்தை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story