திறப்பு விழாவுக்கு வந்த MLA - வழியிலேயே சுற்றிவளைத்து கேள்விகளால் துளைத்தெடுத்த மக்கள்
விருதுநகர் அடுத்த சின்ன பேராலி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறக்க வந்த திமுக எம்.எல்.ஏ-விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்ட நிலையில், திறப்பு விழாவிற்காக விருதுநகர் எம்.எல்.ஏ., சீனிவாசன் அவர்கள் வந்திருந்தார். அப்போது, அதிமுக மாவட்ட கவுன்சிலர் மச்சராஜா தலைமையில், எம்எல்ஏவை முற்றுகையிட்ட பொதுமக்கள், தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறி வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
Next Story