ரூ.2000 கடனுக்கு வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டு - குலை நடுங்கிப்போன கூட்டம் | Virudhunagar

x

விருதுநகர் மாவட்டம் செண்பகத்தோப்பு சாலையில் உள்ள ஆட்டுவலசை பகுதியை சேர்ந்தவர் சூர்யா. இவர் மம்சாபுரம் பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரிடம் செலவிற்காக ரூபாய் இரண்டு ஆயிரம் பணம் வாங்கியுள்ளார். பணத்தை திருப்பி கேட்க வந்த பாண்டி தரப்புக்கும், சூர்யவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பாண்டி தரப்பில் தாக்கியதில் சூர்யா காயம் அடைந்தார். ஆத்திரமடைந்த சூர்யா, தனது வீட்டில் இருந்த நாட்டு வெடிகுண்டுகளை மனைவி தவசியம்மாளை எடுத்து வரச்சொல்லி வீசியதாக கூறப்படுகிறது. ஆனால் குண்டுகள் வெடிக்க வில்லை. இதில் அச்சமடைந்த பாண்டி மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து ஓடி போலீசில் புகாரளித்தனர். அதன்பேரில், சூர்யா அவரது மனைவி தவசியம்மாள், வெடிகுண்டை சப்ளை செய்த ஜெயக்குமார், முனியசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தாக்குதலில் காயமடைந்த சூர்யா கொடுத்த புகாரின்பேரில் பாண்டி மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், சூர்யா வீட்டில் இருந்த நாட்டு வெடிகுண்டுகளையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்