சைலன்ட்டாக என்ட்ரி கொடுத்த அமைச்சர்..! கையும் களவுமாக மாட்டிக்கொண்ட கல்லூரி முதல்வர்

x
  • விருதுநகர் மாவட்டம் மேலேந்தல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திடீர் ஆய்வை மேற்கொண்டார்.
  • ஆய்வகத்தில் போதிய பாதுகாப்பு இல்லாமல் அமிலங்கள் வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அமிலங்கள் மதுபான பாட்டில்களில் வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமிலம் இருக்கும் பாட்டில்கள் மூடப்படாமல் இருப்பதால், தவறி விழுந்தால் என்ன ஆவது என பேராசிரியர்களிடம் கேட்டவர், அவர்கள் கோரிக்கையை ஏற்று அமில குடுவைகள் மற்றும் கேஸ் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
  • கல்லூரி முதல்வர் எஸ்டர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் எழுந்ததை தொடர்ந்து அமைச்சர் ஆய்வு செய்ததாக தெரிகிறது. ஆய்வின் போது முதல்வரையும், பேராசிரியர்களை எச்சரித்தவர், தேர்வு எழுதவந்த மாணவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்