அதிவேகமாக மோதிய கார்..சுருண்டு விழுந்த லாரி ஓட்டுநர்... நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்
அதிவேகமாக மோதிய கார்..சுருண்டு விழுந்த லாரி ஓட்டுநர்... நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி ஓட்டுநர் மீது அதிவேகமாக வந்த கார் மோதும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது... திருவில்லிபுத்தூரில் இருந்து ராஜபாளையம் செல்லும் வழியில் புதுப்பட்டி எனும் கிராமத்தில் இசக்கிமுத்து என்பவர் தனது லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு பழுது நீக்கிக் கொண்டிருக்கும் போது, தென்காசியில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார், ஓட்டுநர் இசக்கி மீது அதிவேகமாக மோதியது... இதில் இசக்கி முத்து படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்... இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் விபத்து பதிவான பதற வைக்கும் காட்சியைப் பார்க்கலாம்...
Next Story