"இதை நம்பிதான் எங்களுக்கு பிழைப்பே.." - புகழ்பெற்ற சாத்தூர் வெள்ளரிக்கு இந்த நிலையா?
- "இதை நம்பிதான் எங்களுக்கு பிழைப்பே.."
- தலைகீழாக புரட்டி போட்ட வானிலை
- புகழ்பெற்ற சாத்தூர் வெள்ளரிக்கு இந்த நிலையா?
- வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வெள்ளரிக்காயை மக்கள் நாடும் நிலையில், கடும் வெயிலால் வெள்ளரிக்காய் விளைச்சலே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
- தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நீர்சத்து நிறைந்த உணவுகளை நாடுகின்றனர்.
- அந்த உணவு பட்டியலில் மக்களுக்கு அருமருந்தாய் திகழ்கிறது வெள்ளரிக்காய்..அந்த வகையில் கோடையில் வெள்ளரிக்காய்க்கு மவுசு அதிகரித்துவிடும்...
- அதிலும் நீர்சத்துடன் சுவைமிகுந்த விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட சாத்தூர் வெள்ளரிக்காய்கள், வியாபாரிகள் மற்றும் மக்களிடையே பிரபலம் வாய்ந்தது..
- சாத்தூர் பகுதியில் வெள்ளரி விளைச்சலுக்கு ஏற்ப மண்ணில் நீரை தக்க வைக்கும் அளவிற்கு மண் வளம் உள்ளதால், சாத்தூர் வெள்ளரிகளுக்கு தனிச்சிறப்பு உண்டு..
- விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், வன்னிமடை, பெரிய கொல்லப்பட்டி, கலிங்கப்பட்டி, நத்தத்துப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் வெள்ளரிக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது..
- ஆனால் வெள்ளரி விளைச்சலில் முக்கிய பங்காற்றும் கண்மாய் சீரமைக்கப்படாததால், விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
- குறிப்பாக சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து வெள்ளரிகளை காக்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.
Next Story