காருக்குள் நடுங்க வைத்த அலறல்... நம்பி சென்ற இளம்ஜோடி... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கொடூர `தாத்தா'... விருதுநகரையே வெலவெலக்க செய்த தாய்
சாதி மறுப்பு திருமணம் செய்ததால் பெண்ணின் குடும்பத்தார் கடத்தி கெளரவ கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது... நடந்தது என்ன?...விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
விருதுநகர் மாவட்டம்... சாத்தூர் அருகே...தாயில்பட்டி கிராமம் தான் இது...
இவ்வூரைச் சேர்ந்தவர் தான் 21 வயது பழனிசாமி...
சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த போது பழனிசாமிக்கும்...ஆலங்குளம் அருகே கொங்கன் குளத்தைச் சேர்ந்த அதே கல்லூரி மாணவியான 19 வயது கிருஷ்ணவேணிக்கும் காதல் மலர்ந்துள்ளது...
இருவரும் வெவ்வேறு சமூகம்...வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பவே...எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த மாதம் 25ம் தேதி திருமணம் செய்துள்ளனர்...
பழனிசாமியும் கிருஷ்ணவேணியும் சிவகாசியில் வாடகைக்கு தனி வீடு எடுத்து தங்கி இருந்த நிலையில்...மாஸ்டர் பிளான் போட்டனராம் பெண் வீட்டார்...
கிருஷ்ணவேணியின் தாத்தா தனக்கு உடல்நிலை சரியில்லை என்றுகூறி பார்க்க வருமாறு பேத்தியை அழைத்ததாகத் தெரிகிறது...
தாத்தாவைக் காண பழனிசாமியும், கிருஷ்ணவேணியும் சேர்ந்து சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில்...
பேர் நாயக்கன் பட்டி அருகே கிருஷ்ணவேணியின் அம்மா அய்யம்மாள், தாய்மாமா ஜெயக்குமார் மற்றும் மணிகண்டன், சிவசுடலை, வேல்முருகன் ஆகியோர் இளம் ஜோடியை ரோட்டில் வைத்தே தாக்கி காரில் ஏற்றினராம்...
சம்பவத்தைப் பார்த்தவர்கள் விபரீதத்தை உணர்ந்து போலீசுக்குத் தகவல் தரவே...காவல்துறையினரும்...பழனிசாமியின் உறவினர்களும் காருக்குப் பின்னாலேயே விரட்டிச் சென்றனராம்...
இதையறிந்த கிருஷ்ணவேணியின் குடும்பத்தினர் திருவேங்கடத்தைக் கடந்து செல்லும் வழியில் இளம் ஜோடியை இறக்கி விட்டு விட்டு தப்பி ஓட முயன்றுள்ளனர்...
சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை சாலையில் குருவிகுளம் போலீசார் காரை மடக்கிப் பிடித்து...பழனிசாமியையும் கிருஷ்ணவேணியையும் பத்திரமாக மீட்டு...கடத்தியவர்களையும் காரையும் காவல் நிலையம் கொண்டு சென்றனர்...
காதல் திருமணம் செய்த ஒரே காரணத்திற்காக பெண் வீட்டார் கௌரவக் கொலை செய்யுமளவு சென்றதாகக் கூறப்படும் சம்பவம் விருதுநகரையே வெளவெளக்கச் செய்துள்ளது...