கலெக்டர் பேசிக்கொண்டு இருக்கும் போதே கொந்தளிப்பு... விவசாயி கேட்ட ஒற்றை கேள்வியால் அதிர்ச்சி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தனியார் நிறுவனத்திக்கு ஆதரவாக ஆட்சியர் செயல்படுவதாக கூறி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் குழு அமைத்து உரிய விசாரணை நடத்தப்படும் என ஆட்சியர் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆமத்தூர் அருகே வீரச் செல்லையாபுரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல விடாமல் சிவகாசியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் வண்டி பாதையை ஆக்கிரமித்திருப்பதாக தாசில்தார் ஆய்வு அறிக்கை சமர்ப்பித்தும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
Next Story