பட்டாசு ஆலையில் வெடி விபத்து - பள்ளத்தில் சிக்கிய தீயணைப்பு வாகனத்தால் பரபரப்பு
விருதுநகர் மாவட்டம் துலுக்கன்குறிச்சியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் மூலப் பொருட்கள் வைக்கும் அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு சாலையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட வந்த சிவகாசி தீயணைப்பு வாகனம் சாலையோர பள்ளத்தில் சிக்கியதை அடுத்து டிராக்டர் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் அந்த வாகனத்தை பள்ளத்தில் இருந்தது மீட்டனர்.
Next Story