பட்டாசு ஆலை விபத்து - இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் | Governor R.N.Ravi

x

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கோட்டையூர் கிராமத்தில் பட்டாசு ஆலை விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியுள்ளதை அறிந்து மிகுந்த வேதனை அடைவதாக குறிப்பிட்டுள்ளார். துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள ஆளுநர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்வதாக கூறியுள்ளார். இதனிடையே, பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவம் தொடர்பாக, ஏற்கனவே 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சதீஷ்குமார், நிரஞ்சனா தேவி, கணேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சதீஷ்குமார் கணேசன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்