கொரோனா ஊரடங்கில் பலி...ரூ.3 கோடி இன்சூரன்ஸ் இழப்பீடு அறிவிப்பு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் வேல்பாண்டி. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு நேரத்தில் சென்னையில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக வேல்பாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 5 பேர் காரில் சென்றனர். துக்க நிகழ்வை முடித்துவிட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பிய நிலையில் தின்டிவனம் அருகே மயிலம் என்ற இடத்தில் அவர்கள் பயணித்த கார், பயங்கர விபத்தில் சிக்கியது. இதில் காரில் இருந்த 5 பேரும் துடிதுடித்து இறந்தனர். இது தொடர்பாக இழப்பீடு வழங்க கேட்டு மதுரை சிறப்பு கோர்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில் மதுரை மாவட்ட கோர்ட்டில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியின்போது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 3 கோடியே 70 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் இழப்பீடு தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.
Next Story