"போடா..பெரிய*** மாதிரி பேசிகிட்டு"..குடித்துவிட்டு கைவைக்க கூடாத இடத்தில் கைவைத்த நபர் | Viral Video
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், சாலையில் பாட்டுப்பாடி ஆடியதை தடுத்த காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். வடசேரி பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர், மதுபோதையில் சாலையில் பாட்டுப்பாடி குத்தாட்டம் போட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் அங்கு சென்ற போலீசார், சாலையில் இதுபோன்று ஆடவேண்டாமென அறிவுறுத்தினர். அப்போது, கண்ணன்புதூரை சேர்ந்த லட்சுமணன் என்பவர், சிறப்பு உதவியாளர் முத்துவை தகாத வார்த்தையால் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்து அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லட்சுமணனை கைது செய்தனர்.
Next Story