நாயைக் காட்டி போலி போலீஸை ஓட விட்ட இளைஞர்.. வைரல் வீடியோ | Viral video
மும்பையில் காவலர் போல் வேடமணிந்து டிஜிட்டல் மோசடி செய்ய முயன்ற ஆசாமியை நாயைக் காட்டி ஓடவிட்டுள்ளார் ஒரு இளைஞர்... அந்தேரி கிழக்கு காவல்நிலையத்தில் இருந்து அழைப்பதாகக் கூறி போலீஸ் உடையில் வீடியோ காலில் தோன்றியுள்ளார் ஒரு மோசடி ஆசாமி... வீடியோ காலில் தனது முகத்திற்கு பதிலாக தன் வளர்ப்பு நாய்க்குட்டியின் முகத்தைக் காண்பித்து கேலி செய்துள்ளார் அந்த இளைஞர்... தன் குட்டு வெளிப்பட்டு விட்டதையறிந்த அந்த போலி போலீஸ் ஆசாமி, உடனடியாக காலை கட் செய்து விட்டு ஓடிவிட்டார்... சமீபகாலமாகவே காவல்துறையினர் போல் நடித்து வீடியோ காலில் தோன்றி மோசடி ஆசாமிகள் பணம் பறித்து வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், மும்பையைச் சேர்ந்த இளைஞரின் சாமர்த்தியமான செயல் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
Next Story