செண்டை மேளம் முழங்க தமிழகத்தில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்

x

விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 600 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீரில் கரைக்கப்பட்டது. பெண்கள் முளைப்பாரி எடுத்து அணிவகுத்து செல்ல, செண்டை மேளம் முழங்க கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை காவிரி ஆற்றில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் மூலம் விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட்டன. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, ஆணைமடகு நீர்த்தேக்கத்தில் கரைக்கப்பட்டது. பாதுகாப்பான முறையில் கிரேன் மூலம் விநாயகர் சிலைகள் நீர்த்தேக்கத்தில் கரைக்கப்பட்டன. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 54 விநாயகர் சிலைகள் பட்டாசு வெடித்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அம்பராம்பாளையம் ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்