டிராக்டர் மீது மோதிய வைகை எக்ஸ்பிரஸ் - சட்டையை கழற்றி ட்ராக்கில் ஓடிய மக்கள்.. அலறிய பயணிகள்
விழுப்புரம் மாவட்டம் ஆனைவாரி பகுதியில் டிராக்டர் டிப்பர் மீது வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. மூடப்பட்டிருந்த ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது, டிப்பரோடு டிராக்டர் சிக்கி கொண்டது. இதையடுத்து டிராக்டர் தனியாக கழற்றப்பட்ட நிலையில், டிப்பர் மட்டும் தண்டவாளத்தில் நின்றது. அப்போது அந்த வழியாக வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் டிப்பர் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. டிராக்டர் டிப்பர் சிக்கியதை பார்த்ததும் அருகே இருந்த பொதுமக்கள் சட்டையை கழற்றிகொண்டு தண்டவாளத்தில் ஓடி, ரயிலை நிறுத்த முயன்றதால் ரயிலின் வேகம் குறைக்கப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மதுபோதையில் இருந்த டிராக்டர் ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் 6 ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
