விழுப்புரத்தில் தடம்புரண்ட ரயில் - அலறிய பயணிகள்
விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு 8 பெட்டிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்டோருடன் புறப்பட்ட பயணிகள் ரயில், சில தூரத்திலேயே, தடம்புரண்டது. இதை அறிந்த ரயில் ஓட்டுநர், சாதூர்யமாக ரயிலை நிறுத்தியதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால், சென்னையில் இருந்து நாகர்கோவில் சென்ற வந்தே பாரத் ரயில், சுமார் 10 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், தடம் புரண்ட ரயில்ப் பெட்டியை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு, சீரமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. மீட்பு பணி காரணமாக, 5 ரயில்கள் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றன. விபத்து குறித்து திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story