மனமுருகி பக்தி பாடல் பாடி ஆச்சரியத்தில் ஆழ்த்திய சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன்
நடிகர் சின்னி ஜெயந்தின் மகனும், கூடுதல் ஆட்சியருமான ஸ்ருதன் ஜெய் நாராயணன், பக்திப்பாடல் பாடி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். விழுப்புரத்தில் உள்ள காஞ்சி சங்கரமடத்தில், ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 31-வது ஆராதனை விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கூடுதல் ஆட்சியரான ஸ்ருதன் ஜெய் நாராயணன், திடீரென மனமுருகி பக்திப்பாடல் பாடி மகிழ்ந்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Next Story