``முடியை இழுத்து கீழே தள்ளி அடித்த நிதி நிறுவன ஊழியர்கள்'' - கலைந்த கர்ப்பிணியின் கரு

x

விக்கிரவாண்டி அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தாக்கியதில் இளம்பெண்ணின் கரு கலைந்த விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்தார். எண்ணாயிரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், நிதி நிறுவனம் ஒன்றில் 12 லட்ச ரூபாய் கடன் பெற்று, கடந்த ஓராண்டாக தவணை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், ஜனவரி மாதத்திற்கான தவணையை செலுத்த தவறியதால், மணிகண்டன் வீட்டிற்கு சென்ற நிதி நிறுவன ஊழியர்கள், இரவு வரை அங்கிருந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மணிகண்டனின் மனைவி நிஷாந்தினியை ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படும் நிலையில், அவரது கரு கலைந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததாக கூறிய நிஷாந்தினி, எஸ்.பி அலுவலகத்தில் குடும்பத்தினருடன் புகாரளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்