தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 3 மகன்கள்.. `அய்யோ என் புள்ள' - கிடைத்த 1 உடலை பார்த்து கதறி அழுத தாய்
மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடித்த போது மாயமான சகோதரர்களை தேடும் பணி இரண்டாவது நாளாக தொடர்கிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தை தோப்பு பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன்களான லோகேஷ், விக்ரம் மற்றும் சூர்யா ஆகியோர் அங்குள்ள பக்கிங்காம் கால்வாயில் நேற்று மீன் பிடித்துள்ளனர். அப்போது தவறி விழுந்த 3 பேரும் நீரில் மூழ்கி மாயமானதாக கூறப்படுகிறது. இரண்டாவது நாளாக அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் லோகேஷ் உடல் அங்குள்ள முட்புதரில் கண்டெடுக்கப்பட்டது.
Next Story