பக்கத்துக்கு வீட்டு இளைஞருடன் உல்லாசம்.. நம்பி வேலைக்கு சென்ற கணவன் - கடைசியில் தலையில் இறங்கிய பேரிடி
என்.ஆர் பாளையத்தை சேர்ந்த கருணாமூர்த்தி, பண்ருட்டி பாலூரை சார்ந்த சுவேதா என்பவரை காதலித்து கடந்த ஜூலையில் திருமணம் செய்துள்ளார். மனைவி சுவேதாவை கிராமத்தில் விட்டுவிட்டு கணவன் சென்னையில் வேலை பார்த்துவிட்டு, விடுமுறையில் வீடு திரும்பி வந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த சதீஷ்குமாருடன் நெருக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சுவேதாவின் மாமியார் ரமணி கண்டித்துள்ளார். மாமியாருக்கு உண்மை தெரிந்ததும் அவரை கொலை செய்ய கள்ளக்காதலுடன் திட்டம் தீட்டிய சுவேதா அக்டோபர் 30 ஆம் தேதி தூங்கிக்கொண்டிருந்த மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். மறுநாள் மாமியார் ஜிப்மர் மருத்துவமனையில் இறந்து போக, இறப்பில் சந்தேகம் அடைந்த ரமணியின் இரண்டாவது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் விசாரித்த போது, சுவேதா, கள்ளக்காதலன் சதீஷ்குமாருடன் திட்டம் போட்டு மாமியாரை கொன்றது தெரியவந்துள்ளது. அதுபோக கல்லூரியில் படிக்கும்போதே சுவேதாவுக்கு பலருடன் தொடர்பு இருந்ததும் தெரியவந்துள்ளது. கொலை பின்னணி தெரியவரவும் போலீசார் சுவேதாவையும், சதீஷ்குமாரையும் கைது செய்துள்ளனர்.