புயலில் உருக்குலைந்த விழுப்புரம்.. பூமிக்குள் இருந்து வெளிப்பட்ட பொக்கிஷம்.. ஆச்சரியத்தில் மக்கள்
விழுப்புரம் பம்பை ஆற்றின் வடகரையில் சோழற் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பெஞ்ஜல் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட மண் அரிப்பினால் ஊரின் மேற்பரப்பில் சங்ககால வாழ்விட பகுதியின் தொல்பொருள் எச்சங்கள் வெளிப்பட்டன. இதனை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்கள் சேகரித்து, பேராசிரியர் ரமேசிடம் கொடுத்தனர். அவர் வந்து ஆய்வு செய்தபோது, சோழர் கால நாணயங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கிடைத்தன. எனவே, அந்த பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story