விழுப்புரத்தை பிடித்த சந்தேகம்.அதிகாரிகள் கையில் எடுத்து காட்டிய பின் நிம்மதி பெருமூச்சு விட்டமக்கள்

x

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே, கிராமத்தில் உள்ள குடிநீர் கிணற்றில் மலம் கலக்கப்பட்டுள்ளதாக கூறி கிராம மக்கள் புகாரளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே, விக்கிரவாண்டி அடுத்த கே.ஆர்.பாளையம் கிராமத்திற்கு விரைந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கிணற்றில் சோதனை நடத்தினர். முடிவில்... கிணற்றில் கிடந்தது மலம் அல்ல, தேன் அடை எனக் கூறிய அதிகாரிகள் தேன் அடையை மக்களிடம் எடுத்துக் காண்பித்து அதனை உறுதியும் செய்தனர். இதனிடையே, கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, கிணற்றில் சேதமடைந்திருந்த அதன் சுற்றுப்புற சுவரை புதுப்பிக்கவும், கிணற்றின் மேல் பக்கத்தை வலையால் முழுவதுமாக மூடவும் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டார். தொடர்ந்து, கிணற்றில் உள்ள நீர் முழுவதையும் வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்