பாட்டி வீட்டிற்கு ஆசை ஆசையாக வந்த சிறுவன்... கரிக்கட்டையான கொடூரம்- வெலவெலத்து போன விழுப்புரம்

x

விழுப்புரத்தில், வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவர் ஒருவர், விதியின் கோரப்பிடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் முழுப் பின்னணி குறித்தும் பார்க்கலாம் விரிவாக....

பள்ளி விடுமுறையை முன்னிட்டு பாட்டி வீட்டிற்கு வந்த சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம் விழுப்புரம் ராஜம்நகரை பதைபதைக்க வைத்திருக்கிறது...

சிறுவனுக்கு நேர்ந்த இந்த கதி ... ஏற்கனவே, ஒருவருக்கு நேர்ந்ததாகவும், அதில் தன் காலை மட்டும் இழந்து... அவர் தப்பியதாகவும் கூறும் பகுதிமக்கள், தற்போது ஏதுமாறிய சிறுவனை பறிகொடுத்து நிற்பதாக கதறி வருகின்றனர்...

அத்தனைக்கும் காரணமாக... விழுப்புரம் ராஜம் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடம் ஒன்றையும், மின்சார வாரியத்தையும் கை காட்டி பகுதி மக்கள் ஆத்திரத்தை கொட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

கட்டட பணிகளுக்காக... மின்வாரியத்திலிருந்து கட்டடத்திற்கு கரண்ட் சப்ளை கொடுக்கப்பட்ட நிலையில், அதற்கான உயர் மின்னழுத்த கம்பி... தாழ்வாகவும், சிறுவர்கள் கைக்கு எட்டும் படி ஆபத்தான முறையில் சென்றதாகவும் கூறப்படுகிறது...

அடிக்கடி மின்னழுத்த கம்பியில் இருந்து தீப்பொறி வருவதை பார்த்து பீதியில் இருந்த மக்கள், உரிய முறையில் மின்னழுத்த கம்பியை உயரத்தில் பொருத்துமாறு தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையில், மின்சார வாரியத்தில் புகாரும் அளித்திருக்கின்றனர்...

இரு தரப்பும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கமால் அலட்சியம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது... இந்நிலையில், கட்டட பணியில் ஈடுபட்டிருந்த கொத்தனார் ஒருவர் உயர்

மின்னழுத்த கம்பியால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு தன் காலை இழந்ததாக பகுதி மக்கள் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது....

இந்நிலையில்தான், விழுப்புரத்தை சேர்ந்த கிஷோர் ராகவ் என்ற சிறுவன், ஆறாம் வகுப்பு முடித்து விட்டு, பள்ளி விடுமுறைக்காக ராஜம் நகரில் உள்ள தன் பாட்டி வீட்டிற்கு வந்திருக்கிறார்...

சம்பவத்தன்று, பக்கத்து வீட்டை சேர்ந்த ஆறு வயது சிறுவனுடன் அந்த கட்டடத்துக்குள் சென்று விளையாடிக் கொண்டிருந்த நிலையில், இருவரும் அதே மின்னழுத்த கம்பியால் மின்சாரம் தாக்கி, உடல் தீப்பற்றி எரிந்த படி தூக்கி வீசப்பட்டிருக்கின்றனர்...

இதில், கிஷோர் ராகவ் பரிதாபமாக உயிரிழந்ததும், ஆறு வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் பகுதிவாசிகளை கதி கலங்கச் செய்திருக்கிறது..


Next Story

மேலும் செய்திகள்