`மப்பேற்றும்' காய்கறிகள்... குப்பென வந்த லோடு வண்டி... உள்ளே பார்த்ததும் ஷாக்கான போலீசார்
புதுச்சேரியில் இருந்து காய்கறி உள்ளேயே நூதன முறையில் மது பாட்டில் கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். விருத்தாச்சலம் லூகாஸ் தெருவைச் சேர்ந்த பன்னீர் மற்றும் மணிகண்டன் இருவரும் டாடா ஏஸ் வாகனத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்கள் அடிக்கடி புதுச்சேரி சென்று அங்குள்ள மதுபாட்டில்களை வாங்கி வந்து, தமிழ்நாட்டில் விற்பனை செய்து வந்துள்ளன. இதுகுறித்த ரகசிய தகவலை தொடர்ந்து, காய்கறி ஏற்றிக்கொண்டு வந்த அந்த வாகனத்தை, விருத்தாச்சலம் பாலக்கரை அருகே போலீசார் மறித்து சோதனை செய்துள்ளனர். அப்போது, காய்கறி உள்ளேயே புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்த மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மதுவையும், வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், பன்னீர் மற்றும் டிரைவர் மணிகண்டனை கைது செய்தனர்.
Next Story