NH-யை அலறவிட்ட மக்கள் - பரபரப்பு காட்சி | viluppuram | Protest

x

NH-யை அலறவிட்ட மக்கள் - பரபரப்பு காட்சி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, மழை நிவாரணத்தொகை வழங்கக்கோரி, தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழையால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்ட நிலையில், திண்டிவனம் அடுத்த கொந்தனூர் கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மழை நிவாரணத் தொகை 2 ஆயிரம் ரூபாய் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திண்டிவனம் - சென்னை- புதுவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்