``இந்த ஊரு அத்திப்பட்டியா..''-``அவருக்கு ஓட்டு போடல-னு சதி பண்ணிட்டாரு'' - கதறும் மக்கள்
விழுப்புரம் அருகே உள்ள முத்தியால்பேட்டை கிராமத்தில் மின்சாரம் இல்லாமல் 5 நாட்களாக தவித்து வரும் பொதுமக்கள், அரசியல் காரணங்களுக்காக தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நிலைமை சீராகி வரும் நிலையில் தங்கள் கிராமம் மட்டும் "அத்திபட்டி" போல் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். கடந்த 5 நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவிப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஏராளமான பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story