களத்தில் இறங்கி புகுந்து விளையாடும் தவெக தொண்டர்கள்

x
  • கடந்த மாதம் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் அக்கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் குவிந்தனர். இந்த நிலையில் மாநாடு நடைபெற்ற இடத்தில், டன் கணக்கான பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் இருந்த நிலையில், அதனை சுத்தம் செய்யும் பணியில், கடந்த 10 நாட்களாக தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மாநாடு நடைபெற்ற இடத்தை விவசாயிகளுக்கு ஒப்படைக்கும் முன் இடத்தை சுத்தப்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது தமிழக வெற்றி கழகத்தின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் மாவட்டத் தலைவர் குஷி மோகன் தலைமையில், ஏராளமான தொண்டர்கள், மாநாடு திடலை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்