விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் அதிர்ச்சி.. கட்டு கட்டாக சிக்கிய ரூ.1.60 கோடி பணம் | Villupuram

x

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ஒரு கோடியே 60 லட்ச ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 4 பேரிடம், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர்களிடம் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒரு கோடியே 60 லட்ச ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சென்னையில் இருந்து திருச்சிக்கு பணத்தை கொண்டு செல்வதாகவும், ஆனால் யாரிடம் பணம் செல்லும் என்பது தெரியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 4 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்