பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்த 3 பேர்.. வெளியான அதிர்ச்சி தகவல்

x

சந்தைதோப்பு பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன்களான லோகேஷ், விக்ரம், சூர்யா ஆகிய மூன்று பேரும் ஞாயிற்றுக்கிழமை மாலை, கடல் முகத்துவாரப் பகுதியான பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, ஒரு தவறி ஆற்றில் விழுந்த நிலையில், அண்ணனை காப்பாற்ற மற்ற இருவரும் குதித்த நிலையில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தீயணைப்புத்துறையினர் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், திங்களன்று காலை லோகேஷ் உடலை மீட்ட நிலையில், மதியம் விக்ரம் உடலும் மீட்கப்பட்டுள்ளது. சூர்யா தீவிரமாக தேடி வந்த நிலையில், மாலை அவரது உடலையும் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். சகோதரர்கள் மூவரது உடலையும் மரக்காணம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்