தனியார் மருத்துவமனையால் உயிரிழந்த மேனேஜர்..கொந்தளித்து இளைஞர்கள் செய்த செயல் - பரபரப்பு காட்சிகள்
தனியார் மருத்துவமனையால் உயிரிழந்த மேனேஜர்..கொந்தளித்து இளைஞர்கள் செய்த செயல் - பரபரப்பு காட்சிகள்
விழுப்புரத்தில் தவறான சிகிச்சை அளித்ததால் மருந்துக்கடை மேலாளர் இறந்ததாக குற்றம் சாட்டி, தனியார் மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏமப்பூரை சேர்ந்தவர் அறிவழகன். சென்னையில் மருந்துக்கடை மேலாளராக பணியாற்றி வந்த இவர், கடந்த 6-ந் தேதி கப்பூர் கூட்டுசாலை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர், தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு திரண்ட உறவினர்கள், அறிவழகனுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி, மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் பொறுப்பற்ற முறையில் பதிலளிப்பதாகவும், சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.