பள்ளிக்கு செல்ல பேருந்து இல்லாமல் லாரியில் லிஃப்ட் கேட்கும் அவல நிலை.. “காலையிலும் இதே நிலைமைதான்’’
பள்ளிக்கு செல்ல பேருந்து இல்லாமல் லாரியில் லிஃப்ட் கேட்கும் அவல நிலை.. “காலையில் வரும்போதும் இதே நிலைமைதான்’’ "லிஃப்ட் கேட்டு செல்வது ஆபத்தானதுதான்... வேறு வழியில்லையே...3 வருடமாக இப்படி தான் போறோம்''
விழுப்புரம் அருகே, பள்ளி முடிந்து வீடு செல்ல பேருந்து வசதி இல்லாததால்... தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் லாரிகளை வழிமறித்து மாணவிகள் லிஃப்ட் கேட்டு செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவிகள் மனக்குமுறலை கொட்டித் தீர்த்திருக்கும் நிலையில், விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குதான் இந்த அவல நிலை..
சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் இந்த பள்ளிக்கு முறையான பேருந்து வசதி இல்லாததால், கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து லிஃப்ட் கேட்கும் அபாய நிலைக்கு ஆளாகி இருக்கின்றனர் மாணவிகள்....
மாலை நேரத்தில் லாரிகளில் லிஃப்ட் கேட்டு செல்வது ஆபத்தானது என்பது தங்களுக்கு தெரியும் எனவும், ஆனால் நேரத்திற்கு வீடு செல்ல வேறு வழி தெரியவில்லை என்றும் சொல்கின்றனர்....
தினமும் 3 மணி நேரம் என கடந்த மூன்று வருடங்களாக இப்படிதான் இன்னலில் தவித்து வருவதாக மாணவிகள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...
கோலியனூர் - கூட்ரோடு பகுதியில், தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் பைக், டெம்போ வேன், கார் மற்றும் லாரிகளை மாணவிகள் வழிமறித்து லிஃப்ட் கேட்டு செல்லும் இந்த சம்பவத்திற்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் ஒரு நிரந்தர தீர்வை உடனடியாக எடுக்க வேண்டுமே என்பதே அனைவரின் விருப்பமும்..