6 மாதமாக நிறுத்தப்பட்ட உதவித்தொகை.. காரணம் தெரிந்ததும் கதிகலங்கிய தம்பதி

x

உயிருடன் இருக்கும் மகனை இறந்துவிட்டதாக கூறி மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை அதிகாரிகள் நிறுத்தியதாக வயதான தம்பதியினர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேல்காரணை கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷன்-காளியம்மாள் தம்பதிக்கு கோவிந்தன் என்ற மகன் உள்ளார். மாற்றுத்திறாளியான இருவருக்கு அரசு சார்பில் வழங்கி வந்த உதவித்தொகையை அதிகாரிகள் நிறுத்தி உள்ளனர். எனவே ஆறு மாதங்களாக நிறுத்தப்பட்ட உதவித்தொகையை மீண்டும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அந்த தம்பதி ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்