நினைத்து பார்க்காத இடத்தில் கூட பெருவெள்ளம்... ஊருக்குள் போட் சேவை துவக்கம்
ஃபெஞ்சல் புயலினால் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாகவும், சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்ட நீர் தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆறான துரிஞ்சல் ஆற்றில் சென்று அதன் உபரி நீர் மனம்பூண்டி மற்றும் அரகண்டநல்லூர் குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இதன் காரணமாக, வீட்டிலிருந்து வெளியே வர முடியாதவர்கள் வீட்டின் மொட்டை மாடியிலும், முதல் தளத்தில் உள்ள அறைகளிலும் தஞ்சம் புகுந்து தங்களை தற்காத்துக் கொண்டனர்.
இவர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று இப்பகுதியில் உள்ளவர்கள் அதிகாலை முதலே கூறிவந்த நிலையில், தற்போது முதற்கட்டமாக மணம்பூண்டி பெருமாள் கோவில் தெருவில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை படகுமூலம் திருக்கோவிலூர் தீயணைப்புத் துறையினர் மீட்டு வருகின்றனர்.