"விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 2026 தேர்தலுக்கான டிரெய்லர்" - திருமா அதிரடி

x

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரின் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம், விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில், இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை கட்சியின் மூத்த தலைவர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். நிகழ்ச்சியில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி, வரும் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்