கடைசி நேரத்தில் விஜய் ஆண்டனிக்கு வந்த சிக்கல்... ஷாக் கொடுத்த போலீஸ் - திடீர் பரபரப்பு

x

சென்னையை அடுத்த மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரியில் விஜய் ஆண்டனி 3.0 இசை நிகழ்ச்சி இன்று மாலை நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக மெட்ரோ ரயில்களின் நேரங்கள் மாற்றி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டிந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் சுமார்

20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என கூறப்பட்டது. அதே சமயத்தில் ஏ.எம். ஜெயின் கல்லூரியில் 20 ஆயிரம் கூடினால் உரிய வசதிகள் செய்ய முடியாது என்றும், குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதால் கடுமையான போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படும் எனக்

கூறப்பட்டது. இந்நிலையில் விஜய் ஆண்டனி 3.0 இசை நிகழ்ச்சிக்கான அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக போலீஸ் தரப்பில் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும் மெட் ரோ ரெயில்கள் வழக்கமான நேரங்களில் இயக்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்