``அனுமதியின்றி பேரணி... நம் விஜயகாந்த்-க்காக... பெரிதுபடுத்த வேண்டாம்" `

x

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவுதினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில்,அமைச்சர் சேகர் பாபு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், விஜயகாந்த் எந்நாளும் தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருப்பார் என்று தெரிவித்தார். இளைஞர் சமுதாயம் விழிப்படையவும், ஊழலுக்கு எதிராகவும் பல்வேறு வகையில் திரைப்படங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும், அமைச்சர் சேகர் பாபு குறிப்பிட்டார். பேரணி அனுமதி விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் சேகர்பாபு கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்