ஆஜரான விஜயபாஸ்கர்.. ஆஜராகாத மனைவி | vijayabaskar

x

ஆஜரான விஜயபாஸ்கர்.. ஆஜராகாத மனைவி

சொத்துக்குவிப்பு வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக புதுக்கோட்டை மாவட்ட சார்பு முதன்மை நீதிமன்றத்​தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானார். அவரது மனைவி ஆஜராகவில்லை. ஆளுநர் ஒப்புதலின் போடப்பட்ட இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு மனு மீதான விசாரணை முடியும் வரை இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கூடாது எனவும் விஜயபாஸ்கர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. பதிவு செய்து கொண்ட நீதிபதி கிரிஜா ராணி, விசாரணையை ஜனவரி 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்