கோட்டை, மதில் சுவர்,யானை..மாநாட்டின் பாதி ரகசியம் உடைந்தது - எண்ணி 4 நாள்..களத்தில் தற்போதைய நிலவரம்

x

கோட்டை, மதில் சுவர்,யானை..மாநாட்டின் பாதி ரகசியம் உடைந்தது - எண்ணி 4 நாள்..களத்தில் தற்போதைய நிலவரம்

தமிழக வெற்றி கழக மாநாடு முகப்பு தோற்றம் கோட்டையின் மதில் சுவர் வடிவிலும், மாநாட்டில் நுழைவு வாயிலில் இருபுறமும் பிளிரும் யானைகள் இரண்டு கால்களை தூக்கி துதிக்கையை தூக்கி வரவேற்கும் விதமாக அமைக்கப்பட்டு வருகிறது

இரண்டு யானைகளுக்கு மேல் நடிகர் விஜயின் புகைப்படம் மெகா சைசில் பொருத்தப்பட உள்ளது

தொடர்ந்து மாநாடு பந்தல் மற்றும் தேசிய நெடுஞ்சாலை வரை தமிழக வெற்றி கழக கொடிகள் 30 அடி உயர கொடிக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு வருகிறது

மாநாட்டின் முகப்பு பகுதியில் இரவை பகலாக்கும் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது, இது மட்டுமல்லாமல் தொடர்ந்து 15000 மின்விளக்குகள் மாநாடு நடைபெறும் பகுதி முழுவதும் எல் இ டி விலக்குகள் பொருத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது

தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ரசிகர்கள் தொண்டர்கள் என மாநாட்டுப் பணிகளை பார்த்துவிட்டு செல்கின்றனர்

மேலும் மாநாடு மேடை பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது


Next Story

மேலும் செய்திகள்