மாநாடு.. நேரில் பார்த்ததும் விஜய்க்கு எஸ்பி அறிவுரை

x

போதுமான வாகன நிறுத்துமிடங்கள் 200 ஏக்கர் இருப்பதால் திருப்தி அடைந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறை

தமிழக வெற்றி கழகம் சார்பில் முதல் மாநாடு வருகின்ற 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநாடு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது, இரண்டு நாட்களாக மழை ஓய்ந்த நிலையில் இன்று மீண்டும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மாநாடு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், இந்நிலையில் நடைபெறும் மாநாடு பணிகளை விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் சிவாச் தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் ஆனந்தை அழைத்துக் கொண்டு நேரில் ஆய்வு மேற்கொண்டார்

தமிழக வெற்றி கழக மாநாடு நடைபெறும் பகுதியில் 90 ஏக்கர் நிலப்பரப்பில் பின்பகுதியில் ரயில்வே தண்டவாளம் செல்வதால் மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு செல்வதை தடுக்க பின் பகுதி முழுவதும் தகடுகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது, அதனை ஆய்வு செய்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாநாடு மேடை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார், மேலும் வாகன நிற்கும் இடத்தையும் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விவசாய நிலத்தில் வாகனங்களை நிறுத்தும்போது அதற்குண்டான பாதுகாப்பு இருக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்


Next Story

மேலும் செய்திகள்