விஜய்யை மூத்த மகனாக நினைத்து வாழும் பாட்டிக்கு இன்ப அதிர்ச்சி - நிறைவேறப்போகும் பெருங்கனவு
தந்தி டிவி செய்தி எதிரொலியாக, தவெக தலைவர் விஜயை மூத்த மகனாக நினைத்து வாழும் மூதாட்டியை அக்கட்சியின் நிர்வாகிகள் சேரில் சந்தித்து பேசினர். நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள மன்னார்கோவில் கிராமத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்பவர், விஜயின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு, அவருடைய தீவிர ரசிகையாக மாறி, தனது மூத்த மகனாக நினைத்து வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து தந்தி டிவியில் செய்தி வெளியானதை அடுத்து, தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள், வள்ளியம்மாவின் வீட்டுக்குச் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர். விஜய்யை வள்ளியம்மாள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story