சல்லி சல்லியாக நொறுக்கப்பட்ட தவெக அமைத்த நிழற்குடை - ஆத்திரத்தில் நிர்வாகிகள் செய்த செயல்
மறைமலைநகர் அருகே முறையாக அனுமதி பெறாமல் தனியார் பெண்கள் கல்லூரி முன்பு தவெக நிர்வாகிகள் அமைத்த பேருந்து நிழற்குடையை நகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். செங்கல்பட்டு மாவட்டம் மல்ராசாபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பெண்கள் கல்லூரி முன்பு
தவெக சார்பில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது. அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட அந்த நிழற்குடையை நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதனால் ஆத்திரம் அடைந்த தவெக நிர்வாகிகள் நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Next Story