வராத திருமா.. பகிரங்கமாக எச்சரித்த விஜய்.. மேடையை விட்டு இறங்கியதும் காட்டுத்தீயே பத்திகிச்சு
2026 சட்டமன்ற தேர்தலில் இருநூறையும் வெல்வோம் என்று இறுமாப்புடன் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக நடிகர் விஜய் பேசியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
தனது முதல் மேடை பேச்சின் தாக்கத்திலிருந்து இன்னும் தமிழகம் தணியாத சூழலில்தான், அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா மூலம் தன் இரண்டாவது மேடை ஏறியிருக்கிறார் தவெக தலைவர் விஜய்..
அம்பேத்கர் குறித்தும், அவரின் தியாகம், முற்போக்கு சிந்தனைகள் குறித்தும் நினைவு கூர்ந்த விஜய், ஜனநாயகத்தின் ஆணி வேரே சுதந்திரமான தேர்தல்தான் எனவும், தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்துகளுடன் நியமிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறார்..
மத்தியில் மணிப்பூர் கொடுமைகளை மத்திய அரசும், தமிழகத்தில் வேங்கை வயல் பிரச்சினையை மாநில அரசும் கண்டு கொள்ளாமல் இருப்பது... தற்கால சமூகத்தில் அம்பேத்கர் இருந்திருந்தால் தலை குனிந்து வெட்கப்பட்டிருப்பார் எனவும் விஜய் பேசி இருக்கிறார்..
சம்பிரதாயத்திற்காக ட்விட் பதிவிடுவதும்
சம்பிரதாயத்திற்காக மழை தண்ணீரில் நின்று புகைப்படம் எடுப்பதிலும் தனக்கு உடன்பாடில்லை எனவும், வேறு வழியில்லாமல் அதனை சகித்துக் கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்...
கூட்டணி கணக்குகளை மட்டும் நம்பி, இறுமாப்புடன் இருநூறும் வெல்வோம் என முழக்கமிடும் ஆட்சியாளர்களை எச்சரிப்பதாக விஜய் பேசியது தமிழக அரசியல் களத்தை சூடு பிடிக்கச் செய்திருக்கிறது...
கூடவே, ஆட்சியாளர்கள் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026இல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள் என்றிருக்கிறார் விஜய்..
இறுதியாக, விசிக தலைவர் தொல் திருமாவளவனுக்கு கூட்டணி கட்சி சார்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதை என்னால் யூகிக்க முடிகிறதெனவும், திருமாவளவன் இங்கில்லை என்றாலும், அவரின் மனம் முழுக்க முழுக்க நம்முடன் தான் இருப்பதாகவும் கூறி உரையை முடித்திருக்கிறார்..