``ஆதவ் அர்ஜூனா நட்பு.. அரசியலுக்கு நல்லதல்ல..விஜய்” - பரபரப்பை கிளப்பிய அமீர்

x

ஜனநாயக நாட்டில் மக்கள் ஆதரவு இல்லாமல் ஒருவர் முதல்வராகவே முடியாது - இயக்குநர் அமீரின் வாட்ஸ் அப் பதிவு

பிறப்பால் ஒருவர் பணக்காரர் ஆகலாம். பணக்கார வாரிசுகளை மனப்பதாலும் ஒருவர் பணக்காரர் ஆகலாம். ஆனால் ஜனநாயக நாட்டில் மக்கள் ஆதரவு இல்லாமல் ஒருவரால் முதல்வராகவே முடியாது.

செல்வந்தர்களின் திடீர் அரசியல் பிரவேசம் என்றைக்குமே மக்களுக்கு நல்லது தராது ஆதவ் அர்ஜூனாவின் நட்பு விஜயின் அரசியலுக்கு நல்லதல்ல என இயக்குநர் அமீரின் வாட்ஸ் அப் பதிவு

சென்னையில் நேற்று 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது

ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுகிறது. பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியதை போல, பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராக கூடாது. இனி தமிழகத்தை ஆள வேண்டும் என்றால் ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆளவேண்டும்.

விசிக துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சு பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்