வேல்ஸ் பல்கலை. பட்டமளிப்பு விழா.. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்பு | Vels University

x

சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார். தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் நினைவுப்பரிசாக சபாநாயகருக்கு செங்கோல் வழங்கப்பட்டது. இளங்கலை, முதுகலை, மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என சுமார் 4 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், நடிகர் எஸ்.ஜெ.சூர்யா, பிரபல பேட்மிண்டன் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த்,

நேச்சுரல்ஸ் குழும அழகு நிலையங்களின் உரிமையாளர் திரு.சி.கே.குமரவேல் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பட்டமளிப்பு விழாவில் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் வேந்தர் ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்