மினி வேன் டயர் வெடித்து சாலையில் சிதறிய மீன்கள் - அள்ளி சென்ற மக்கள்

x

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே மினி வேன் கவிழ்ந்து சாலையில் சிதறி கிடந்த மீன்களை, பொதுமக்கள் போட்டிபோட்டு அள்ளிச் சென்றனர். விஜயவாடாவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு மீன் ஏற்றி சென்ற மினி வேன், பள்ளிகொண்டா அருகே டயர் வெடித்து விபத்தில் சிக்கியது. அதிலிருந்த 2 டன் மீன்கள் சாலையில் சிதறின. இதை கவனித்த அப்பகுதி மக்கள் ஓடோடி வந்து, தங்களால் முயன்ற அளவிலான மீன்களை எடுத்து சென்றனர். ஒரு சிலர் சாக்குப்பை, பாத்திரத்திலும், சிலர் லுங்கி, சேலைகளிலும் மீன்களை அள்ளிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்