"தூக்கி போட்டு போறீங்களா.! போங்க.." - அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்..
வேலூர் மாவட்டம் காட்பாடியில் சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய மாநகராட்சி ஊழியர்களிடம், கடையின் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காந்திநகர் 1 வது கிழக்கு பிரதான சாலையை ஆக்கிரமித்து 50க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் செயல்பட்டு வந்தது. இதனால், போக்குவரத்து நெரில் ஏற்பட கடைகளை அகற்றும் படி, பலமுறை அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநகராட்சி பொறியாளர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர், போலீசார் உதவியுடன் 50 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
Next Story