8வது பிரசவம்... பயத்தில் பெண் செய்த செயல்... அதிர்ந்த மருத்துவமனை.. -வேலூரை பரபரப்பாக்கிய சம்பவம்

x

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே 8வது பிரசவத்திற்கு பயந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பெண், ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

மேல்ஆலாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதியர் பிரசாந்த் - அமுதா... இந்த தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளன. 2 குழந்தைகள் இறந்துள்ளன. எட்டாவது முறையாக கர்ப்பம் ஆன அமுதா, மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்து வந்துள்ளார். பிரசவத்திற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், 8வது பிரசவத்திற்கு பயந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறி உள்ளார். இதனையடுத்து செவிலியர்கள் அமுதாவின் வீட்டிற்குச் சென்று அறிவுரை கூறியுள்ளனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு அமுதா அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்