கஞ்சா போதையில் இளைஞரின் வெறியாட்டம்.. மாறு கை மாறு கால் வாங்கிய மக்கள்
- வேலூரில் கஞ்சா போதையில் கோவில் உண்டியலை உடைத்த இளைஞரை, பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள கருமாரி அம்மன் கோயிலுக்குள் இரவில் புகுந்த இளைஞர் ஒருவர், கடப்பாரையால் உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிச்செல்ல முயன்றார். சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள், அவரை கையும் களவுமாக பிடித்து விட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கஞ்சா போதையில் இருந்த அந்த இளைஞர், பொதுமக்களையும், போலீசாரையும் ஆபாசமாக வசை பாடியதால், கோபமடைந்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். பொதுமக்களிடம் இருந்து அவரை மீட்ட போலீசார், விசாரணைக்காக காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்றனர்.
Next Story